என்னென்ன தேவை?
முழு வெள்ளை உளுந்து - 1 கப்,
வெற்றிலை - 6,
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
கல் உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
பச்சை மிளகாய் - 2.
எப்படிச் செய்வது?
உளுந்தை ஊற வைத்து அரைக்கவும். மாவை கல்லிலிருந்து எடுப்பதற்கு முன் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். அதில் அரிசி மாவு கலந்து வெற்றிலையை ஒன்று, இரண்டாகக் கிள்ளிப் போடவும். பச்சை மிளகாயை விழுதாக அரைத்து சேர்க்கவும். கடாயில் எண்ணெய் காயவிட்டு வடையாகத் தட்டி, பொரித்தெடுக்கவும்.