சேப்பங்கிழங்கு வறுவல்
என்னென்ன தேவை?
சேப்பங்கிழங்கு - 1/2 கிலோ,
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் மற்றும் அரிசி மாவு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 200 கிராம்.
எப்படிச் செய்வது?
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை உரித்துக் கொள்ளவும். உரித்த பின் கிழங்கை வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய கிழங்கில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரிசி மாவு, சோள மாவு (கார்ன்ஃப்ளார்) போட்டுப் பிசறி வைத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.