என்னென்ன தேவை?
7 அப் அல்லது ஸ்ப்ரைட் - 2 லிட்டர்,
புதினா இலை - 30,
பச்சை மிளகாய் - 3,
நொறுக்கிய ஐஸ்கட்டி - சிறிது.
எப்படிச் செய்வது?
ஒரு டம்ளர் 7 அப் அல்லது ஸ்ப்ரைட் உடன் நொறுக்கிய ஐஸ் கட்டிகள் சேர்க்கவும். மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும் புதினா இலையையும் அதில் சேர்த்து நன்கு கலந்து உடனடியாகப் பரிமாறவும்.