தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் - 8
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (அரைத்தது)
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 1 கப்
முட்டை வெள்ளைக்கரு - 2 (அடித்தது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
புதினா - சிறிது (நறுக்கியது)
வெதுவெதுப்பான நீர் - 1/2 கப்
பிரட் தூள் - 1 கப்
எண்ணெய் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் லெக் பீஸை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் கத்திக் கொண்டு சிக்கன் லெக் பீஸின் தசைப்பகுதியை ஆழமாக கீறி விட்டு, உப்பு கொண்டு சிக்கன் மீது தேய்த்து விட வேண்டும்.
பிறகு ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி மிளகாய் மற்றும் 1 டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கலந்து, அந்த கலவையை சிக்கன் மீது தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதே சமயம் மற்றொரு பௌலில் மைதாவை போட்டு, முட்டையை ஊற்றி, சிறிது தண்ணீர், மீதுள்ள பச்சை மிளகாய் பேஸ்ட் மற்றும் மிளகு தூளை சேர்த்து சிறிது உப்பு போட்டு, நன்கு மென்மையாக சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
பின் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் நினைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான சிக்கன் லெக் ப்ரை ரெடி!!!
l