Author Topic: குஜராத்தி ஸ்டைல்: வெண்டைக்காய் வறுவல்  (Read 515 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்ன
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, சுத்தமான துணி கொண்டு துடைத்துவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கையும் துண்டுகளாக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் வெந்தயத்தை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து உருளைக்கிழங்கு மற்றும் வெண்டைக்காய் சேர்த்து, 5-6 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

(வெண்டைக்காயில் உள்ள ஈரப்பதம் நீங்கும் வரை வதக்கவும்) பின் மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பௌலில் தனியாக வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் கலவையை சேர்த்து, 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வதக்கி விட வேண்டும்.

இறுதியில் அதனை மூடி வைத்து, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், குஜராத்தி ஸ்டைல் வெண்டைக்காய் வறுவல் ரெடி!!!

l