உருளைக்கிழங்கு - ஒன்று
முட்டை - 3
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 5
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி / கலவை தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
மிளகு - அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை இடிக்கவும். கடைசியாக சிறிது கறிவேப்பிலையைச் சேர்த்து இடித்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி வேகவைத்து கையால் பொடித்துக் கொள்ளவும். முட்டையை அரை பதமாக வேகவைத்து ஓடு நீக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் இடித்து வைத்த சின்ன வெங்காயக் கலவையை சேர்த்து வதக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விட்டு பச்சை வாசம் போக நன்றாக கொதிக்கவிடவும்.
பின் வேகவைத்த முட்டையைச் சேர்க்கவும். கரண்டியால் முட்டையை ஒன்றிரண்டாக பொடித்துவிட்டு, வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.
அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்ததும் ஃப்ரெஷாக பொடி செய்த மிளகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
சுவையான ஆலு முட்டைக்கறி தயார். சப்பாத்திக்கு சூப்பரான ஜோடி இது.
சின்ன வெங்காயக் கலவையை இடிப்பதற்கு பதிலாக மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தும் எடுக்கலாம். நீர் விடக்கூடாது.