என்னென்ன தேவை?
தேங்காய் - 1,
வெல்லம் - 100 கிராம்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
சுக்குத் தூள் - சிறிது,
முந்திரி - 5, நெய் - வறுப்பதற்கு.
எப்படிச் செய்வது?
தேங்காயில் இரண்டு தர பால் எடுக்கவும். வெல்லத்தை பாகு காய்ச்சி அதில் இரண்டாம் பாலை ஊற்றிக் கலந்து, மிதமான தீயில் வைக்கவும். பிறகு முதல் பால் விட்டு, அது முறிவதற்குள் இறக்கவும். நெய்யில் முந்திரி வறுத்து, சுக்குத் தூள், ஏலக்காய் தூள் ஆகியவற்றோடு பாயசத்தில் சேர்த்துப் பரிமாறவும்.