Author Topic: உடல் ஸ்கேன்களில் புற்றுநோய் செல்களை கண்டறிய உதவும் சர்க்கரை  (Read 1422 times)

Offline kanmani

லண்டன்: ஆராய்ச்சியாளர்கள் காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல் (எம்ஆர்ஐ) ஸ்கேன்களில் சோதனையின் போது  வெளிச்சத்திற்ககாக கட்டிகள் மேலே சர்க்கரை பயன்படுத்தி புற்றுநோய் கண்டறியும் புதிய மற்றும் மலிவான உத்தியை உருவாக்கியுள்ளனர். அதாவது மனிதனின் மற்ற செல்களை விட புற்றுநோய் செல்கள் தங்களது வளர்ச்சிக்கு அதிகமான சர்க்கரையை ஈர்த்துக் கொள்கின்றன.


இதனால் புற்றுநோயின் செல்களை எளிதாக காண்பதற்கு இந்த புது நுட்பத்தை ' குளுக்கோஸ் இரசாயன பரிமாற்றம் பூரித பரிமாற்ற (glucoCEST) 'என்று பெயரிட்டுள்ளனர். எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுத்துவதற்கு முன்பே மனிதனின் உடலுக்குள் குளுக்கோஸ் செலுத்தப்படும், புற்றுநோய் செல்கள் அதிகமாக ஈர்த்துக் கொள்ளவதால் எம்ஆர்ஐ ஸ்கேன்களில் எளிதாக அடையாளம் காணலாம். எதிர்காலத்தில், நோயாளிகள் சிறப்பு மருத்துவ மையங்களை காட்டிலும் உள்ளூர் மருத்துவ மையங்களிலும் ஆற்றல்மிக்க ஸ்கேன் செய்யப்பட முடியும்.