Author Topic: சூரியன் வெப்பத்தால் பூமியில் அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் உயிர்களே இருக்காது  (Read 1142 times)

Offline kanmani

சூரியன் வெப்பம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருப்பதால் அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்களே இருக்காது என்பது தெரியவந்துள்ளது. மேலும், சூரியன் வெப்பத்தால் கடல் நீரையும் வற்றி உயிர்கள் படிப்படியாக அழிந்துவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமிக்கு மிக ஆழமான நீர் ஊற்றுகளில் வாழும் நுண்ணுயிர்கள் மட்டுமே உயிர் வாழும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த இயற்கை மாறுதல்களால் நீர் வற்றிவிடும், கார்பன் டை ஆக்ஸைட் அளவு குறைந்துவிடும்.

கார்பன் டை ஆக்ஸைட் அளவு குறைந்துவிட்டால் அதை சுவாசிக்கும் தாவரங்கள் அழிந்துவிடும். தாவரங்கள் அழிந்துவிட்டால் உயிர்களின் அழிவும் தொடங்கிவிடும். இந்த மாறுதல்கள் ஏற்படும் போது பூமியில் இருந்து மனிதன் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களில் குடியேறும் வாய்ப்பும் உள்ளது. திடீர் இயற்கை மாறுதல்கள் அல்லது விண்கற்கள் தாக்குதல் அல்லது நீண்ட கால இயற்கை மாறுதல்கள் போன்ற காரணத்தினாலோ நடக்கலாம். ஆனால் கண்டிப்பாக அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் இருக்கப் போவதில்லை என்று ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிந்துள்ளது.