என்னென்ன தேவை?
வேகவைத்த சாதம்- 2 கப்
கேரட்-1
பீன்ஸ்- 10 முதல் 12
மிளகு- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 3 அல்லது 4
பெரிய வெங்காயம்-1
இலவங்கப்பட்டை 1 துண்டு
பசுமை ஏலக்காய்- பொடி செய்தது 3 அல்லது 4
கிராம்பு-4
சீரகம்- -1 தேக்கரண்டி
பூண்டு - 1தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
நெய்(அ) எண்ணெய்-2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை- ஒரு சிறிய கொத்து
எப்படி செய்வது?
கேரட், மிளகாய், பீன்ஸ், ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை கொஞ்சம் பெரிய அளவில் நறுக்கிகொள்ளலாம். சமைத்து வைத்த சாததை ஒரு கப்பில் எடுத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பழுப்பு நிறத்தில் வருவதற்கு முன்பு இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெங்காயம் பழுப்பு நிறத்தில் வரும் வரை வதக்கவும். சில நொடிகள் கழித்து துண்டாக வெட்டப்பட்ட பூண்டையும் அதனுடன் சேர்க்கவும்.. ஒரு நிமிடம் கழித்து துண்டாக்கப்பட்ட காய்கறிகள், பச்சை மிளகாயை போட்டு உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் காய்கறிகளை மூடிவைத்து வேகவிடவேண்டும். காய்கறிகள் வெந்ததும் சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் கொத்தமல்லி இலையை தூவி அழகுபடுத்தவும். காய்கறி புலாவ் ரெடி.