என்னென்ன தேவை?
பச்சை முந்திரிகள்2 கப்
எண்ணெய்2 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
கருப்பு உப்பு-1/4 தேக்கரண்டி
கருப்பு மிளகு
சிவப்பு மிளகு-1/8தேக்கரண்டி
சிவப்பு மிளகு-1/4 தேக்கரண்டி
வறுத்த சீரக தூள்-1 தேக்கரண்டி
மாம்பழ தூள்1/2 தேக்கரண்டி
எப்படி செய்வது
நடுத்தர வெப்பத்தில் வைத்து கடாயில் பச்சை முந்திரிகளைப் போட்டு பழுப்பு நிறத்தில் வரும் வரை வறுக்கவும். பிறகு வறுத்த முந்திரியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்க வேண்டும். சூடு குறையும் வரை காத்திருக்கவும். ஒரு கிண்ணத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து மசாலாக்களையும் கலந்து கொள்ளவும். முந்திரியின் மீது வெதுவெதுப்பான சூடு இருக்கும் போது கலந்து வைத்துள்ள பொடி அனைத்தையும் முந்திரி மீது தூவவும். வெப்பநிலை குறைந்த பிறகு காற்றுபுகாத ஒரு டப்பாவில் போட்டு பாதுகாக்கவும். தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும். இந்த மசாலா முந்திரியை ஒரு மாதம் வரை பாதுகாக்கலாம்.