Author Topic: பூண்டு துவையல்  (Read 585 times)

Offline kanmani

பூண்டு துவையல்
« on: July 10, 2013, 11:33:00 PM »
என்னென்ன தேவை?

பூண்டு - 20 பல்,
காய்ந்த மிளகாய் - 2,
புளி -சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு,
பெருங்காயம்- தலா கால் டீ ஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.