Author Topic: ஆரஞ்சு கோல்டு காபி  (Read 482 times)

Offline kanmani

ஆரஞ்சு கோல்டு காபி
« on: July 10, 2013, 11:15:25 PM »
என்னென்ன தேவை?
இன்ஸ்டன்ட் கப்பச்சினோ தூள் - 1 டீஸ்பூன்,
பால் - 1 கப்,
ஆரஞ்சு ஜூஸ் - 2 டீஸ்பூன்,
ஆரஞ்சு பழத்தின் ஆரஞ்சு நிறத் தோல் (துருவியது) - 1 டீஸ்பூன்,
பிரவுன் சுகர் (அப்படியே கிடைக்கும்) - 1 டீஸ்பூன்,
நன்கு அடித்த கிரீம் - 1 டீஸ்பூன்,
ஆரஞ்சு சுளைகள், ஐஸ் கட்டிகள் - சிறிது.
எப்படிச் செய்வது?

ஒரு கப் சூடான பாலில் ஒரு டீஸ்பூன் கப்பச்சினோ தூளையும், ஒரு டீஸ்பூன் பிரவுன் சுகரையும் சேர்த்து நன்கு கலந்து கப்பச்சினோ காபி  தயாரிக்கவும். அதை ஆற வைத்து, அரை மணி நேரத்துக்கு ஃபிரிட்ஜில் வைத்து குளிரச் செய்யவும். பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் கிரீம் மற்றும் ஒரு சிட்டிகை ஆரஞ்சு தோல் சேர்க்கவும். ஆரஞ்சு  மணத்துடன், அருமையான கப்பச்சினோ காபி தயார். மேலே கொஞ்சம் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து, ஆரஞ்சு சுளைகளால் அலங்கரித்து, கிரீம் சேர்த்துப்  பரிமாறவும்.