தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 4
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மைதா/கோதுமை மாவு - 3 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் சேர்த்து தாளித்து, அரைத்த தேங்காய் பேஸ்ட்டை போட்டு, 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின்பு மல்லி தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி சேர்த்து நன்கு கிளறி, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து, 4-5 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
அதே சமயத்தில் ஒரு பாத்திரத்தில் கோதுமை/மைதா மாவைப் போட்டு, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு ஈரமான துணி கொண்டு மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதனை சிறு உருண்டைகளாக்கி, அந்த உருண்டைகளின் நடுவே ஒரு ஓட்டை போட்டு, அதில் தேங்காய் மசாலாவை வைத்து, மூடி, பின்பு அதனை சிறு பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சிறு பூரிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான தேங்காய் கச்சோரி ரெடி!!!
இதனை சட்னியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.