Author Topic: ~ உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கான சில வித்தியாசமான வழிகள்!!!! ~  (Read 582 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கான சில வித்தியாசமான வழிகள்!!!!




பொதுவாக உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வதற்கு கடுமையான உடற்பயிற்சிகளை செய்து, நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வதையே வழக்கமாக்கி கொண்டிருப்போம். ஆனால் இது தேவையா? என்பதை அனைவரும் யோசித்து பார்க்க வேண்டும்.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று கூறுவர். ஆரோக்கியம் என்பது உணவை மட்டும் பொறுத்து அமைவதில்லை, மனதையும் பொறுத்தே அமைகின்றது. அதிலும் நல்ல ஆரோக்கியமான உணவு, பழக்கவழக்கம், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை கடுமையாக செய்யாமல், இயல்பாக செய்தாலே போதுமானது. ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிக்கும் போது கடினமான வழிகளை யோசிக்காமல், சில எளிமையான வழிகளையே யோசிக்க வேண்டும். அத்தகைய எளிமையான முயற்சிகள் என்னவென்று தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படிக்கவும்

டென்ஷனை குறையுங்கள் தேவையற்ற டென்ஷனும், மனக் குழப்பமும், மன அழுத்தத்தை தான் கொண்டு வரும். ஆகவே மனதை எப்பொழுதும் இயல்பாகவும், அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும். இது இதய நோய் வராமல் காக்கும். மேலும் ஆரோக்கியத்துடனும் வாழ முடியும்.

நடனம் நடனம் ஆடுவதன் மூலம் உடலில் தேவையான அளவு கால்சியமானது உற்பத்தி செய்யப்படுவதால், எலும்புகள் வலுவோடு இருக்கும். மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காமலும் பாதுகாத்து கொள்ள முடியும்.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், மீன்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இதை உணவில் சேர்த்து கொள்வதன் முலம் இதய நோய் மற்றும் புற்றுநோயிலிருந்து காத்து கொள்ள முடியும்.

கொக்கோ இனிப்பான அனைத்தும் பொருள்களும் கெடுதல் என்று அர்த்தம் இல்லை. கொக்கோவை சாப்பிடுவதன் மூலம், மூளை மற்றும் இதயம் ஆரோக்கியம் அடைகிறது. மேலும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்த முடியும் என்று கூறப்படுகின்றது.

சுத்தமான கார் கார் டாஷ்போர்டில் அழுக்கு சேர்ந்தால் கெடுதல் உங்களுக்கு தான். ஆகவே அதை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் டாஷ்போர்டின் குளிர்த்தன்மை கிருமிகளுக்கு மிகவும் பிடித்த இடம் என்பதால், அதை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும்.

குளியல் குளிர்ந்த நீரில் குளித்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். இவ்வாறு குளிப்பதால் மூளையை வேகமாக இயங்க வைக்க முடியும். மேலும் மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றில் இருந்து தப்பிக்க முடியும்.

முத்தம் சுமார் முப்பது நிமிடங்களுக்கு முத்தம் கொடுத்தால், அனைத்து விதமான அலர்ஜியில் இருந்தும் தப்பிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகின்றது. ஆகவே முத்தம் தந்து ஆரோக்கியத்தை வளர்த்திடுங்கள்.

சிரிப்பு சிரிப்பானது, நல்ல ஹார்மோன்களை உருவாக்கி மன அழுத்தத்தை போக்குகின்றது. ஆகவே நன்றாக சிரித்து பேசி, வாழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்

தண்ணீர் இது பழைய கதை என்றாலும் உண்மை. தண்ணீர் அதிகம் பருகுவதால், அழகை பெறுவதோடு மலச்சிக்கல், நீர் கடுப்பு, சிறுநீரக பிரச்சனை போன்றவற்றையும் சரிசெய்ய முடியும்.

நேராக அமரவும் நேராக உட்காரவில்லை என்றால் கூன், நுரையீரல் செயலிழப்பு மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படும். ஆகையால் நேராக அமர்ந்து ஆரோக்கியத்தை பெறுங்கள்.