தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு - 500 கிராம்
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 1/2 கப் (நன்கு அடித்தது)
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு சிறிது சேர்த்து, உருளைக்கிழங்கை போட்டு 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின்பு அதன் தோலை உரித்துவிட வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து தயிரில், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகப் பொடி, சோம்பு பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி, அடித்து வைத்துள்ள தயிரை ஊற்றி நன்கு கிளறி விட்டு, அடுப்பில் வைத்து, 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் உருளைக்கிழங்குகளை சேர்த்து மூடி, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் கரம் மசாலாவைத் தூவி கிளறி, நறுக்கிய கொத்தமல்லியை தூவி பிரட்டி இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான காஷ்மீரி தம் ஆலு ரெடி!!! இதனை சப்பாத்தி, நாண் மற்றும் சாதம் போன்றவற்றுடன் சாப்பிடலாம்.