Author Topic: அவல் மிளகு புட்டு  (Read 457 times)

Offline kanmani

அவல் மிளகு புட்டு
« on: June 27, 2013, 11:00:47 PM »
என்னென்ன தேவை?

மிளகு - 10 அல்லது 15,
அவல் - 100 கிராம்,
கறிவேப்பிலை - ஒரு சிறு கொத்து,
சீரகம் - 1 டீஸ்பூன்,
வெள்ளை முழு உளுந்து - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
கடுகு- சிறிது, உப்பு,
எண்ணெய்- தேவைக்கு.

எப்படிச் செய்வது? 

மிளகு, கறிவேப்பிலை, சீரகம், உளுந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அவலை அலசி உடனே  தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து தாளித்து அவல், அரைத்த பவுடர், தேவையான  உப்பு, மல்லி போட்டு கலந்து படைத்து பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது முந்திரி வறுத்து சேர்த்து பரிமாறலாம்.