Author Topic: தேங்காய் லெமன்கிராஸ் காய்கறி சூப்  (Read 692 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

லெமன்கிராஸ் இலைகள்-2கப
காரட்  ஒன்று
தக்காளி  ஒன்று
பீட்ரூட்  ஒன்று
பீன்ஸ  இரண்டு
காலி ஃபிளவர் சிறிது
வெங்காயம்  இரண்டு
பச்சை மிளகாய்  இரண்டு
பால்  200 மி.லி.
பெருங்காயம்  சிறிதளவு
சோளமாவு  ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள்  ஒரு டீஸ்பூன்
வெண்ணெய்  ஒரு ஸ்பூன்
உப்பு  சிறிதளவு
கொத்தமல்லி தேவையான அளவு
எப்படி செய்வது?

காற்கறிகள் அனைத்தையும் சுத்தமான நீரில் கழுவி, பின்னர் மிகவும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். லெமன்கிராஸ் இலைகள், வெங்காயம்  பச்சை மிளகாய் தேவைப்படும் அளவிற்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு  காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயத்தைப் போட்டு நன்கு சிவக்கும் வரை வதக்கவும். வதக்கியதும் இரண்டு லிட்டர் தண்ணீர் விட்டு அதில் சோள  மாவைப் போட்டு நன்கு கலக்கவும். தண்ணீர் கொதி வந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை அதில் போடவும். காய்கறி நன்கு வெந்து கலந்ததும்,  பாலை விட்டு இறக்கவும். பின்னர் உப்பு மற்றும் மிளகுப் பொடியைக் கலந்து லெமன்கிராஸ் இலையை மேலாகத் தூவவும்.