Author Topic: சுக்கு குழம்பு  (Read 464 times)

Offline kanmani

சுக்கு குழம்பு
« on: June 20, 2013, 11:40:48 AM »
    சுக்கு - விரல் அளவு துண்டு
    புளி - கோலி அளவு
    சின்ன வெங்காயம் - 5
    தக்காளி - ஒன்று
    பூண்டு - 10 பல்
    மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
    பெருங்காயம், உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
    எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
    மிளகு, சீரகம், வெந்தயம், தனியா, எள் - தலா அரை தேக்கரண்டி

 

வெறும் வாணலியில் மிளகு, சீரகம், வெந்தயம், தனியா, எள், நசுக்கிய சுக்கு சேர்த்து சிவக்க வறுத்து ஆறவிட்டு பொடிக்கவும்.
   

புளியை ஊறவைத்து கரைத்து, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
   

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
   

வதக்கியவற்றை புளிக்கரைசலில் சேர்த்து கொதிக்கவிட்டு, நன்கு சுண்டி வந்ததும் அரைத்த பொடி சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
   

அஜீரணம், வாயுத்தொல்லை, தொண்டைக்கட்டு உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற சுக்கு குழம்பு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். காரம் குறைவாக சேர்த்தும் செய்யலாம்.
« Last Edit: June 22, 2013, 10:00:43 AM by kanmani »