Author Topic: தேங்காய் போளி  (Read 477 times)

Offline kanmani

தேங்காய் போளி
« on: June 19, 2013, 11:26:35 PM »
என்னென்ன தேவை?

முற்றிய தேங்காய்-1துருவியது
மைதா மாவு-500 கிராம்
வெல்லம்-100 கிராம்
ஏலக்காய்பொடி-சிறிதளவு
முந்திரி- 50 கிராம்
அரிசி மாவு-சிறிதளவு
நெய் (அ) எண்ணெய்-தேவைக்கேற்ப
எப்படி செய்வது?

துருவிய தேங்காயுடன் அதற்கேற்றார் போல வெல்லம் போட்டு வாணெலியை சூடு செய்து கிளறவும். தேங்காயில் இருக்கும் தண்ணீர் பதமே போதுமானது. வெல்லம் உருகி இரண்டும் ஒன்று சேர்த்து கெட்டியாக வந்துவிடும். நன்றாக கிளறி ஏலக்காய்ப்பொடி, முந்திரி (நெய்யில் வறுத்து) இவற்றை போட்டு ஆறியதும் உருட்டி வைத்துக்கொள்ளவும். (பூரணக் கலவைக்க சிறிது அரிசி மாவு தூவிக்கொள்ளவும்) கெட்டியாக இருக்க வேண்டும். மைதாவை உப்பு, தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து  சிறிதளவு எடுத்து வட்டமாக செய்து அதன் உள்ளே பூரணத்தை வைத்து மூடி எண்ணெய் தொட்டு மெல்லியதாகத் தட்ட வேண்டும். பிறகு தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய் விட்டு வார்த்து எடுக்கவும். இது மிகவும் நன்றாக இருக்கம்.