என்னென்ன தேவை?
கேழ்வரகு - 200 மில்லி
அரிசிமாவு-50மில்லி
வெல்லம்-200மில்லி தூள் செய்தது
ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்- 1 கிண்ணம்
எப்படி செய்வது?
வெல்லத்தை 1 கிண்ணம் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து மண் இல்லாமல் வடிக்கவும். வெல்லக் கரைசலில் கேழ்வரகு மாவு , தேங்காய் துருவல், ஏலப்பொடி இவற்றைப் போட்டு நன்றாகக் கட்டியில்லாமல் கரைக்கவும். தேவையானால் மீண்டும். தண்ணீர் விட்டு கரைக்கலாம். மாவு பதம் ரொம்ப கெட்டியாக இருக்கக்கூடாது. அதே சமயத்தில் நீர்க்கவும் இருக்ககூடாது. தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவி துடைத்து மாவை குழிக்கரண்டியால் மேலிருந்து விட வேண்டும், அப்போது தான் ஒரே அளவாக பரவலாக மாவு கல்லில் விழும்.
இதற்கு நெய்யும், எண்ணெய்யும் கலந்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும். இதை மிக எளிதான முறையில் செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தற்கும் நல்லது. வெல்லம் கேழ்வரகு சேர்ப்பதனால் இரும்புச்சத்து கிடைக்கிறது. இதே மாவை வெல்லம் போட்டு கெட்டியாக கிளறி அடையாக தட்டலாம். இந்த கேழ்வரகு அடை ரொம்ப ருசியாக இருக்கும். இதற்கு நெய் தொட்டு குழந்தைகளுக்கு தரலாம். இனிப்பு(வெல்லம்) அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு போட்டுக்கொள்ளலாம்.