Author Topic: சைனீஸ் வெஜிடபிள் சூப்  (Read 510 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

வெங்காயத்தாள்- 2 கொத்து
கேரட்- 100 கிராம்
கோஸ்-50 கிராம்
பீன்ஸ்- 50கிராம்
மிளகுத்தூள்-1/2 டீஸ்பூன்
சோளமாவு-1/2 டீஸ்பூன்
சோயா சாஸ்-1/2 டீஸ்பூன்
அஜினோமோட்டோ-1/2 டீஸ்பூன்
எண்ணெய்- 1டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எப்படி செய்வது?

கேரட், பீன்ஸ், கோஸ், வெங்காயத்தாள், ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்  ஊற்றி வெங்காயம் நறுக்கிய காய்கறிகள் அஜினோமோட்டோ சேர்த்து வதக்கி காய்கள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவைக்கவும். காய்கள் நன்றாக வெந்ததும் சோயாசாஸ், மிளகுத்தூள், போட்டு பிறகு சோளமாவு தண்ணீரில்  கரைத்து ஊற்றி குறைந்த தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு சுடச்சுட பரிமாறவும்.