என்னென்ன தேவை?
ஐஸ் கியூப்ஸ் - ஒரு உயரமான டம்ளர் நிறைய,
அங்கோஸ்த்ரா சிரப் - 1 டீஸ்பூன்,
லெமனேட் - கால் டம்ளர்,
கிரான்பெர்ரி ஜூஸ் - கால் டம்ளர்,
தண்ணீர் - கால் டம்ளர்,
இஞ்சி - 1 சிறிய துண்டு,
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1,
எலுமிச்சைப் பழம் - பாதி,
டொபாஸ்கோஸ் சாஸ் - 2 துளி.
எப்படிச் செய்வது?
உயரமான டம்ளரில் போட்ட ஐஸ் கியூப்ஸின் மேல் முதலில் அங்கோஸ்த்ரா சிரப்பை விட்டு, டம்ளரை லேசாகச் சுழற்றவும். ஐஸ்கட்டிகளின் இடையில் சிரப் பரவும். அதன் மேல் லெமனேட், பிறகு கிரான்பெர்ரி ஜூஸ், அடுத்து தண்ணீர் விடவும். இஞ்சியைச் சேர்க்கவும். பாதியாக வகிர்ந்த பச்சை மிளகாயை உள்ளே போடவும். எலுமிச்சைப் பழச்சாற்றை, விதையுடன் பிழியவும்.
கடைசியாக டொபாஸ்கோஸ் சாஸை ஐஸ்கட்டிகளின் மேல் விட்டு, அப்படியே பரிமாறவும். அங்கோஸ்த்ரா சாஸ், கிரான்பெர்ரி ஜூஸ், டொபாஸ்கோஸ் சாஸ் எல்லாமே பெரிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கின்றன. அங்கோஸ்த்ரா சாஸில் லேசான கசப்பும், லெமனேட்டில் புளிப்பும், கிரான்பெர்ரியில் இனிப்பும், டொபாஸ்கோ சாஸில் காரமும் இருக்கும். வெயில் காலத்தில் குடித்தால் புத்துணர்ச்சி பொங்கும்.