Author Topic: ஆலு சொக்கா  (Read 636 times)

Offline kanmani

ஆலு சொக்கா
« on: June 19, 2013, 11:07:16 PM »

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 2,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
நெய் - 2 டீஸ்பூன்,
வறுத்துப் பொடித்த சீரகம் - கால் டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேக வைத்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு, நெய்  எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இதை சாதத்தில் பிசைந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.  கொல்கத்தாவில் பிரபலமானது இந்த அயிட்டம். அவர்கள் கடுகு எண்ணெய் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். நாம் நெய் சேர்த்துக்  கொள்ளலாம்.