Author Topic: க‌ட‌லில் ஏது ந‌திக‌ளின் விலாச‌ம்  (Read 1584 times)

Offline thamilan

உன் விலாசம்
ஜாதியிலும் மதத்திலுமா இருக்கிறது
உன் ரத்தத்தை கிளறிப்பார்
நீயும் ஒரு சமுத்திரம்
என்பதை அறிவாய்

சமுத்திரத்தில் ஏது
நதிகளின் விலாசம்
நான் என்ப‌தே இப்போது
ப‌ன்மை தான்

கைரேகைக‌ளில்
சிக்க‌ல் விழுந்துவிட்ட‌
இந்த‌க் கால‌திலும்
குல‌ம் என்கிறாய்
கோத்திர‌ம் என்கிறாய்

உன் குல‌த்தொழிலை தான்
செய்துகொண்டிருக்கிற‌யா நீ

உச்ச‌ விருத்தி செய்துதான்
உயிர் வாழ்கிறானா பிராம‌ண‌ன்
ஆட்சிப்பீட‌ம் த‌விர‌
வேறெங்கும் அம‌ர்வ‌தில்லையா ச‌த்திரிய‌ன்
வைசிய‌ன் ம‌ட்டும் தான்
த‌ராசு பிடிக்கிறானா
ஏர் ஓட்டுப‌வ‌ன் எல்லாம்
சூத்திர‌னா
வ‌யிற்றுக்காக‌ முந்தானை விரிக்க‌
தொட‌ங்கி விட்ட‌ பின்
ப‌த்தினி வேச‌ம் எத‌ற்கு

ஞானிக‌ள் செய்ய‌ முடியாத‌தை
விஞ்ஞானி செய்து விட்டான்
இதோ
நீயே ம‌ழித்துக்கொள்கிறாய்
நீயே துவைத்துக் கொள்கிறாய்
உன் க‌ழிப்ப‌றையை கூட‌
நீயே க‌ழுவிக்கொள்கிறாய்
இனி யாரை பார்த்து
எட்டி நில் நீ
தாழ்ந்த‌ஜாதி என்று சொல்ல‌ப்போகிறாய்

இல்லை
இன்னும் நீ
அந்த‌ ஜாதிகார‌ன் நான் என்கிறாயா
பிரேத‌மே
உயிர் உள்ள‌வ‌ர்க‌ள் ம‌த்தியில்
உன‌க்கென்ன‌ வேலை?

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 604
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
ஞானிக‌ள் செய்ய‌ முடியாத‌தை
விஞ்ஞானி செய்து விட்டான்
இதோ
நீயே ம‌ழித்துக்கொள்கிறாய்
நீயே துவைத்துக் கொள்கிறாய்
உன் க‌ழிப்ப‌றையை கூட‌
நீயே க‌ழுவிக்கொள்கிறாய்
இனி யாரை பார்த்து
எட்டி நில் நீ
தாழ்ந்த‌ஜாதி என்று சொல்ல‌ப்போகிறாய்


nice hamilan superrrrrrrrrr ;)
                    

Offline RemO

// வ‌யிற்றுக்காக‌ முந்தானை விரிக்க‌
தொட‌ங்கி விட்ட‌ பின்
ப‌த்தினி வேச‌ம் எத‌ற்கு//

//நான் என்ப‌தே இப்போது
ப‌ன்மை தான்//

nalla sinthanai
nala karuthu
very nice machi

Offline செல்வன்

ஒன்றே குலம் என்ற வரிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது உங்கள் கவிதை . நல்ல சிந்தனை . வாழ்த்துக்கள் தமிழன்.

Offline Yousuf

Quote
நீயே ம‌ழித்துக்கொள்கிறாய்
நீயே துவைத்துக் கொள்கிறாய்
உன் க‌ழிப்ப‌றையை கூட‌
நீயே க‌ழுவிக்கொள்கிறாய்
இனி யாரை பார்த்து
எட்டி நில் நீ
தாழ்ந்த‌ஜாதி என்று சொல்ல‌ப்போகிறாய்


நல்ல கவிதை மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை!