தேவையான பொருட்கள்:
சீஸ் - 1 கப் (துருவியது)
கனிந்த வாழைப்பழம் - 4 (மசித்தது)
கோதுமை மாவு - 1 கப்
மைதா - 1/2 கப்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் வாழைப்பழம், துருவிய சீஸ், கோதுமை மாவு, மைதா மாவு, மிளகு தூள், சீரகப் பொடி, தயிர், சர்க்கரை சேர்த்து, வேண்டுமெனில் தண்ணீர் ஊற்றி, போண்டா பதத்திற்கு பிசைந்து, 2-3 மணிநேரம் மூடி ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை உருண்டை பிடித்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான சீஸ் வாழைப்பழ போண்டா ரெடி!!!