என்னென்ன தேவை?
சேமியா - அரை கப்,
பால் - 4 கப்,
சர்க்கரை - ஒன்றரை கப்,
பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு - தலா 8,
பழக்கலவை - 1 கப், (பொடியாக நறுக்கியது),
நெய் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சேமியாவை சிறு துண்டுகளாக ஆக்குங்கள். வாணலியில் நெய்யைக் காயவைத்து சேமியாவைப் போட்டு வறுக்கவும். பின் ஆறவிடவும். பாலை நன்கு சுண்டக் காய்ச்சி அதில் சேமியாவை சேர்க்கவும். மிதமான தீயில் சேமியாவை வேக விடவும். சேமியா நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். இது நல்ல கீர் பதம் (பாயச பதம்) வந்ததும் இறக்கி, சிறிது ஆறியதும் பொடியாக நறுக்கிய பழக்கலவை, சீவிய பாதாம், முந்திரி சேர்க்கவும். விருப்பப்பட்டால் க்ரீம் சேர்த்துக் குளிர வைத்துப் பரிமாறுங்கள்.
குறிப்பு: பழக்கலவையை பால் ஆறியபின்தான் சேர்க்க வேண்டும். விருப்பமான பழங்களை சேர்க்கலாம்.