Author Topic: சீஸ் பஃப்ஸ்  (Read 631 times)

Offline kanmani

சீஸ் பஃப்ஸ்
« on: May 11, 2013, 10:41:45 AM »
என்னென்ன தேவை?

மைதா - 200 கிராம், ஈஸ்ட் (பெரிய கடைகளில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், வெண்ணெய் (அ) நெய் - 2 டேபிள்ஸ்பூன், பால் - அரை கப்,  சர்க்கரை - 1 டீஸ்பூன், சீஸ் - 50 கிராம்.

எப்படிச் செய்வது?

பாலை சூடாக்கி, அதில் சர்க்கரையும் ஈஸ்ட்டும் சேர்த்து 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். மைதா மாவை சலிக்கவும். அதில் ஈஸ்ட் கலவை மற்றும்  உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து, மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். மாவை 3 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். பிறகு எடுத்துப் பார்த்தால், அது இரண்டு  மடங்கு அதிகமாகியிருக்கும். மறுபடி பிசையவும். சின்னச் சின்னதாக உருட்டி, அதன் நடுவில் குழித்து கொஞ்சம் சீஸ் வைத்து, ஓரங்களை மூடவும்.  வெண்ணெய் அல்லது நெய் தடவிய தட்டில், அவற்றை அடுக்கி, 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். லைட் பிரவுன் கலர் வரும் வரை வைத்திருந்து எடுத்து  சூடாகப் பரிமாறவும்.