Author Topic: போஹா  (Read 830 times)

Offline kanmani

போஹா
« on: May 10, 2013, 11:35:50 PM »
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 1 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
எண்ணெய் - 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் சேர்த்து கிளற வேண்டும். பின்னர் அக்கலவையில் பாலை பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, பின் அந்த மாவுக் கலவையை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

 இப்போது சுவையான போஹா ரெசிபி ரெடி!!!