முழு மீன் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
குடைமிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
தந்தூரி மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
முட்டை வெள்ளைக்கரு - ஒன்று
உப்பு
மீனை சுத்தம் செய்து அதில் ஆங்காங்கே கீறி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடை மிளகாயை நறுக்கிக் வைக்கவும்.
தூள் வகைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, முட்டை வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கலந்துள்ள மசாலாவை மீனின் மீது நன்றாக பூசி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் பேக்கிங் ட்ரேயில் சிறிது எண்ணெய் தடவி மீனை வைத்து பேக் செய்யவும்.
இடையிடையே மீனை திருப்பிவிட்டு, ஆலிவ் ஆயில் தெளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடைமிளகாயை மேலே தூவி, 10 நிமிடம் வேக விடவும்.
பின் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.