மட்டன் - கால் கிலோ
முருங்கைகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
பொடிக்க:
ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு - தேவைக்கு
மட்டனை சுத்தப்படுத்தி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் தூள் வகைகள் சேர்த்து வேகவைக்கவும்
வெந்தவுடன் நறுக்கிய முருங்கைக்காய், கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்கு வெந்ததும் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்க்கவும்.
பொடிக்க கொடுத்தவற்றை பொடித்து, எண்ணெயில் தாளித்து குழம்பில் சேர்க்கவும். (விரும்பினால் 2 மேசைக்கரண்டி அளவு மைய விழுதாக அரைத்த தேங்காய் சேர்க்கலாம்).
கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும் சுவையான மட்டன் முருங்கை குழம்பு தயார்.