Author Topic: மாங்காய் பச்சடி  (Read 653 times)

Offline kanmani

மாங்காய் பச்சடி
« on: May 03, 2013, 11:18:21 PM »


    மாங்காய் - ஒன்று
    காய்ந்த மிளகாய் - 4
    வெல்லம் - ஒரு பெரிய கட்டி
    வெங்காயம் - ஒன்று (சிறியதாக)
    மஞ்சள் தூள்
    உப்பு
    எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

 

தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைக்கவும்.
   

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
   

காய்ந்த மிளகாய் சிவந்ததும் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
   

வெங்காயம் வதங்கியதும் தோல் நீக்கி பெரியதாக நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
   

அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
   

பின் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
   

தண்ணீர் வற்றி மாங்காய் வெந்து, நன்கு குழைந்து வரும் போது, வெல்லத்தை பொடித்துச் சேர்க்கவும்.
   

வெல்லம் கரைந்து, சேர்ந்தாற்போல் வரும் போது இறக்கவும்.
   

இனிப்பு, புளிப்பு, காரச் சுவையுடன் நாவில் நீர் ஊற வைக்கும் மாங்காய் பச்சடி ரெடி.