Author Topic: தயிர் பெர்ரி ஸ்மூத்தி  (Read 758 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 5
ராஸ்ப்பெர்ரி - 5
ப்ளூபெர்ரி - 10
தயிர் - 1/2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் பெர்ரிப் பழங்களை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து, அத்துடன் ஐஸ் கட்டிகளையும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், ருசியான தயிர் பெர்ரி ஸ்மூத்தி ரெடி!!!