Author Topic: ~ :: அன்னையர் தினம் :: ~  (Read 725 times)

Offline MysteRy

~ :: அன்னையர் தினம் :: ~
« on: May 12, 2013, 03:03:15 PM »
:: அன்னையர் தினம் ::





பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த அன்னைக்கு, அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே மாதம் 2வது ஞாயிற்றுகிழமை (மே 13), சர்வேதச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று அன்னைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

எப்படி வந்தது :

அன்னையர் தினம், முதன் முதல் அன்னா ஜார்விஸ் அவர்களால் விர்ஜினியாவில் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களையே மையமாகக் கொண்டது. தற்போது இத்தினத்தை உலகின் பெரும் பாலான நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது.

பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் என்ற கிராமத்தில் வாழ்ந்தவர். அன்று யுத்தக்களத்தில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர்.

அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயின. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும் சமாதானத்துக்கும் அயராது பாடுபட்டவர்தான் “அனா ஜார்விஸ்’ அவரின் பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904 இல் மறைந்தார்.

மகள் ஜார்விஸ் முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ் தேவாலயத்தில் 1907ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.

1913ஆம் ஆண்டு தன் பணி நிமித்தம் மகள் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார்.

கஷ்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கௌரவிக்கப்பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

ஆனால், ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல் வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் “அன்னையர் தினம்’ கொண்டாடப்படவும் அந்த நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1914ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிறை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

இதனையே கனடா அரசும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தானத்திலிருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளில் “அன்னையர் தினம்’ என அறிவித்து நடைமுறைப்படுத்தியது.

ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை. உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும்” என்ற எண்ணத்துக்கு அடுத்த வித்தை இட்டார்.

எதையும் வியாபாரமாக்கி பணம் சேகரிக்கும் அமைப்பு “அன்னையர் தினம்’ அன்று அன்னையின் படம் ஒன்றைப் பொறித்து கொடியொன்றை விற்று பணம் சேர்த்தது. வெகுண்டெழுந்தார் ஜார்விஸ். 1923ஆம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். “என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் “உணர்ச்சிபூர்வமான ‘ நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் டொலர் சேர்க்கின்ற நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதாடி வென்றார்.

” உலகம் முழுக்க “அன்னையர் தினம்’ அனுசரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று தனது 84ஆவது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார்.

அவருடைய ஆசை இன்று அனேகமாகப் பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம். “அன்னையர் தினம்’மூலம் தெரியாவிட்டாலும், இன்று அகிலம் அன்னையர் தினத்தை அவரவர் இஷ்டத்துக்கு கொண்டாடி மகிழ்கின்ற நாளாகத் திகழ்கிறது. சிங்கப்பூரில் சீனிவாசப் பெருமாள் கோவிலில் மகாலட்சுமிக்கு விசேட வழிபாடு செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படுவது இந்தத் தினத்தில் இன்றும் நடைபெறுவதைக் காணலாம்.

இந்த நாளானது பண்டைய கிரேக்கத்தில் அன்னை வழிபாட்டின் மரபிலிருந்து வழங்கப்பட்டதாக கருதினர். இது கிரேக்க கடவுளின் தாயான சைபெலெக்கு நடத்தப்படும் விழாவாகும். எனவே இந்த நாள் வந்ததும் அன்னையர் தமது உறவினர் நண்பர்கள் போன்றோருக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர்.

உலகெங்கிலுமுள்ள அநேகமான நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் மே பதின்னான்காம் திகதியே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதன்முதல் சூரியன் உதிக்கும் நாடான ஜப்பானில் வணிகப்படுத்தப்பட்ட விடுமுறை தினமாக உள்ளது. பரிசளிப்பில் ஈடுபட்டுள்ள அன்னையரும் ஏனையோரும் கார்னேஷன் மற்றும் ரோஜா போன்ற மலர்களை பரிசாக அளிக்கின்றனர்.

மெக்ஸிக்கன் அரசு அன்னையர் தினத்தை பெருவிழாவாக அக்காலகட்டத்திலிருந்தே நடைமுறைப்படுத்தி வந்தனர். இப்பொழுது அங்கு விடுமுறை தினமானது அன்னை மற்றும் கன்னி மேரி தினங்களாகக் கொண்டாடப் படுகின்றன.

இந்து பாரம்பரியம் இதை மாதா தீர்த்த ஆயுள் ஷி அல்லது தாய் அரைத்திங்கள் புனிதப் பயணம் என்று அழைக்கின்றது. மேலும் இது இந்து மக்கள் தொகை அதிகமாகவுள்ள நேபாள நாட்டில் அதி விசேடமாக கொண்டாடப் படுகின்றது. ஆபிரிக்க நாடுகள் அன்னையர் தினக் கருத்தை பெரும்பாலான பிரிட்டிஷ் பாரம்பரியத்திலிருந்து ஏற்றுக் கொண்டன. இருண்ட கண்டமென அழைக்கப்படுகின்ற ஆபிரிக்க கண்டத்தில் பல்வேறுபட்ட கலாசாரங்களிடையே அன்னையைப் போற்றும் பல திருவிழாக்களும் நிகழ்ச்சிகளும் காணப்படுகின்றன.

வங்கதேசத்தில் அன்னையர் தினம் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளானது அரசாங்கம் மற்றும் அரச சாரா அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விவாத நிகழ்ச்சியுடன் கடைப்பிடிக்கப்படுகின்றது. சர்வதேச சமூகத்தில் அன்னையர் வகிக்கும் முக்கிய பங்கினை அடை யாளப்படுத்துவதன் நோக்கமாகக் கொண்ட 'ரத்தின கர்வா விருதை' சில அனையர்கள் வழங்குகின்றனர். அன்னையர்களின் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த பிரஜையாக விளங்க பாராட்டும்படி சிறப்பான முறையில் வளர்த்ததற்காக கிராண்ட் ஆசாத் ஹோட்டல் வழங்கிய விருதைப் பெற்றனர். மேலும் தலைநகரில் அந்த தினத்தைக் குறிக்க வரவேற்பு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

கனடாவிலும் அன்னையைர் தினம் நடாத்தப்படுகின்றது. பொதுவாக அனைத்து அம்சங்களிலும் இது அமெரிக்க ஒன்றிய அன்னையர் தினத்தை ஒத்திருக்கிறது.

சீனாவில் அன்னையர் தினம் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. மற்றும் கார்னேஷன்கள் என்பது மிகவும் சிறப்பு பரிசுப் பொருளாக கருதப்படுகின்றது. இதுவே அதிகம் விற்பனையாகும் மலர் வகையாகவும் உள்ளன. 1997ம் ஆண்டில் இது ஏழைத்தாய்மார்களுக்கு குறிப்பாக சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமப்புற வறிய தாய்மார்களுக்கு உதவும் நாளாக அமைக்கப்பட்டது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான 'பீப்பில்ஸ் டெயிலி' (Peoples Daily) பத்திரிகையில் கூட அன்னையர் தினம் பற்றிய சிறப்புக் கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

மேற்குலக நாடுகளென்றாலும் சரி தெற்கு ஆசியா மாநகரங்களிளென்றாலும் சரி அன்னையர் தினத்தை மக்கள் உணர்ச்சி பூர்வமாக கொண்டாடுவதை அவதானிக்கலாம்.

இத்தருணத்தில் அன்னை இந்திரா, அன்னை திரேசா, மேடம் கியூரி அம்மையார், அன்னை சாரதா தேவி, அன்னை கஸ்துரிபாய், தாதிகள் சேவையை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஃபுளோரன்ஸ் றைட்டிங்கேல், தங்கம்மா அப்பாக்குட்டி போன்றவர்களை நினைவு கூருவது உத்தமமாகும்.

மனிதருள் மாணிக்கமாத் திகழும் இவர்கள் வெவ்வேறு துறைகளில் பிரசித்தி பெற்றவர்கள் என்பதனால் இவ்வன்னையரையும் நாம் அன்னையர் தினமாக இன்று மதிப்பளிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.