ராகி மாவு - ஒரு கப்
பாதாம், கருப்பு எள், வேர்க்கடலை, தேங்காய் - ஒரு கப்
கருப்பட்டி - கால் கப்
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் ராகி மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் பாதாம், வேர்க்கடலை, எள், தேங்காய் அனைத்தையும் சேர்த்து வறுக்கவும். விரும்பினால் ஒரு ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவற்றை ப்ளெண்டரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் மாவு, கருப்பட்டி சேர்த்து மேலும் 2 சுற்று அரைக்கவும்.
கலவையை விரும்பும் அளவு உருண்டைகளாக பிடிக்கவும். இதற்கு பால், நெய் தேவைப்படாது. உருண்டை பிடிக்க வரவில்லையெனில் லேசாக பால்/நெய் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான, ஹெல்தியான ராகி லட்டு தயார்.