Author Topic: ஈஸியான... வென்னிலா ஐஸ் க்ரீம்  (Read 660 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்
பால் பவுடர் - 1 கப் (இனிப்பில்லாதது)
ப்ரஷ் க்ரீம் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப் ( அரைத்து பொடி செய்தது)
 வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பாலை நன்கு கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின் பாலுடன், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் அதனை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு, ப்ரீசரில் நன்கு கெட்டியாகும் வரை வைக்க வேண்டும்.

பிறகு அது கெட்டியானதும், அதனை வெளியே எடுத்து, வேறொரு பௌலில் போட்டு, லேசாக உருகிய நிலையில் அதனை பரிமாறினால், எளிமையான வென்னிலா ஐஸ் க்ரீம் ரெடி!!!