Author Topic: கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  (Read 609 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்: மரவள்ளிக்கிழங்கு - 1 கிலோ தேங்காய் - 1/2 மூடி (துருவியது) பச்சை மிளகாய் - 2-3 பூண்டு - 5 பல் சீரகம் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கடுகு - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1 முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

2 வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

3 பின்னர் பூண்டு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் மஞ்சள் தூளை மட்டும் தனியாக அரைப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

4 பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

5 பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.

6 அத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

7 பின் மசித்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

8 அதோடு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேண்டுமெனில் உப்பு சேர்க்க வேண்டும்.

9 அனைத்தையும் சேர்த்த பின், அதனை 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

10 இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மரவள்ளிக்கிழங்கு ரெசிபி ரெடி!!!