Author Topic: பசலைக் கீரை புலாவ்  (Read 577 times)

Offline kanmani

பசலைக் கீரை புலாவ்
« on: April 26, 2013, 11:44:04 PM »
தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
பசலைக் கீரை - 1/2 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக்க் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சீரகம் பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள பசலைக் கீரையை போட்டு, 3 நிமிடம் வதக்கி விடவும்.

பின்பு உப்பு, மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான பசலைக் கீரை புலாவ் ரெடி!!!