தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 2 கப்
வேர்க்கடலை - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பசலைக் கீரையை நன்கு சுத்தமாக கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் துவரம் பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பசலைக் கீரை, துவரம் பருப்பு மற்றும் வேர்க்கடலை போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கி, 10 நிமிடம் குளிர வைத்து, கடைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
பின்பு வேக வைத்துள்ள பசலைக் கீரை கலவையை சேர்த்து, உப்பு போட்டு, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான துவரம் பருப்பு பசலைக் கீரை சப்ஜி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.