Author Topic: லாலிபாப் இட்லி  (Read 775 times)

Offline kanmani

லாலிபாப் இட்லி
« on: April 20, 2013, 03:06:07 PM »
என்னென்ன தேவை?

இட்லி அரிசி - 200 கிராம்,
உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
கடலைப் பருப்பு - 100 கிராம்,
முளைகட்டிய பாசிப்பயறு - 100 கிராம்,
துவரம் பருப்பு - 100 கிராம்,
சீரகம், வெந்தயம் - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
உப்பு, நெய் - தேவைக்கேற்ப,
பல் குத்தும் குச்சிகள் - தேவைக்கேற்ப (பெரிய கடைகளில் கிடைக்கும்).
தாளிக்க...
கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு,
முந்திரி, எண்ணெய் - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு வகைகளை வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு சற்று  கரகரப்பாக அரைத்து, உப்பு சேர்த்து 4 மணி நேரம் புளிக்கவிடவும். சிறிது எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து, மாவில் கலந்து,  நெய் தடவிய குட்டிக்குட்டி கப்புகளில் மாவை ஊற்றி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும். பல் குத்தும் குச்சியில் ஒவ்வொரு இட்லியாகச் செருகி,  சிவப்பு மற்றும் பச்சை சட்னியுடன் பரிமாறவும்.