என்னென்ன தேவை ?
கொள்ளு - 100 கிராம்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படி செய்வது ?
கொள்ளை வறுத்து, குழைய வேக வைத்த பின், தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து, பூண்டு, மிளகு, பெருங்காயம், சீரகத்தை தட்டிப்போடுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். அதில், கரைத்து வைத்துள்ள தண்ணீரை ஊற்றி கொதி வருவதற்கு முன் இறக்குங்கள். ஆந்திர உளவளச் சாறு ரெடி.