Author Topic: குடைமிளகாய் ப்ரைடு இட்லி  (Read 657 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

இட்லி - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு இட்லி மற்றும் குடைமிளகாய் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும்.

பின் அதில் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் நன்கு கிளறி, இறக்கி விட வேண்டும்.

இப்போது சூப்பரான குடைமிளகாய் ப்ரைடு இட்லி ரெடி!!!

இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாற வேண்டும்.