Author Topic: நெல்லிக்காய் சாதம்  (Read 631 times)

Offline kanmani

நெல்லிக்காய் சாதம்
« on: April 06, 2013, 11:47:56 AM »
என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கப்,
பெரிய நெல்லிக்காய் - 4-5,
பச்சை மிளகாய் - 4,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப,
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2.

எப்படிச் செய்வது?

அரிசியை உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். நெல்லிக்காயைத் துருவிக் கொள்ளவும் அல்லது விதை நீக்கிவிட்டு, பச்சை மிளகாயுடன் சேர்த்து நன்றாகத் தூளாக இடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்து, அத்துடன் வடித்த சாதம், நெல்லிப் பொடி, தேவையான உப்பு சேர்த்து வதக்கி, உடனே இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். இது உடம்புக்கு மிகவும் நல்லது. வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு. ஜலதோஷத்துக்கு நல்லது.