Author Topic: உளுத்தம்பருப்பு சாதம்  (Read 586 times)

Offline kanmani

என்னென்ன தேவை?
உளுத்தம்பருப்பு - 125 கிராம்,
இளம் வறுப்பாக, நிறம்
மாறாமல் வறுத்த சம்பா பச்சரிசி - 500 கிராம்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பூண்டு - 25 கிராம்,
பெருங்காயம், உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது,
நெய் - சிறிது,
தண்ணீர் - 1 லிட்டர்.
எப்படிச் செய்வது?

தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் அரிசி, உளுந்தைச் சேர்த்து வேக விடவும். சாதமாகி, பதமாக வெந்ததும், அதில் தேங்காய்த் துருவல், சீரகம்,  உப்பு, பூண்டு, பெருங்காயம் சேர்த்து, இன்னொரு கொதி விட்டு, வடிகட்டவும். கடைசியில் நெய்யில் கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்துப் பரிமாறவும்.
உளுந்து, இடுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பலம் தரும்.