தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
உலர் திராட்சை - 7-8
முந்திரி - 10
பிஸ்தா - 3-4
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்
நெய் - 1/2 கப்
optional : kesari colour
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
ரவை பொன்னிறத்தில் வந்ததும், அதில் தண்ணீர் ஊற்றி, ரவை தண்ணீரை உறிஞ்சும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.( kesari colour theyvai pattaal ingae add panalaam)
தண்ணீர் வற்றியதும், அதில் மீதமுள்ள நெய் ஊற்றி நன்கு அல்வா பதத்திற்கு வந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறி, இறுதியில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விட்டு இறக்க வேண்டும்.
இப்போது தித்திக்கும் ரவா கேசரி ரெடி!!! இதன் மேல் முந்திரி, பிஸ்தா மற்றும் உலர் திராட்சை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.