Author Topic: முந்திரி குக்கீஸ்  (Read 623 times)

Offline kanmani

முந்திரி குக்கீஸ்
« on: April 02, 2013, 09:57:31 PM »


    ஆல் பர்பஸ் ஃப்ளார் (maidha) - 200 கிராம்
    அரைத்து மாவாக்கிய சீனி - 120 கிராம்
    பட்டர் - 200 கிராம்
    வெனிலா எஸன்ஸ் - ஒரு மேசைக்கரண்டி
    வறுத்து நறுக்கிய முந்திரிப்பருப்பு - ஒரு கப்
    உப்பு - அரை பின்ச்

 

 
   

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
   

பட்டரையும், சீனியையும் நுரைக்க அடிக்கவும்.
   

எஸன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
   

அதனுடன் உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக மாவைச் சேர்த்து பிசையவும்.
   

பின் முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும்.
   

நன்கு பிசைந்து உருட்டி பேக்கிங் ஷீட்டில் வைக்கவும்.
   

அப்படியே சுருட்டி, குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்.
   

ஒரு மணி நேரத்திற்கு பின் உருட்டி வைத்த மாவில் குக்கீஸை கால் இன்ச் அளவில் வெட்டிக் கொள்ளவும்.
   

அவனை 175' ல் முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் ஷீட்டை வைக்கவும். அதில் குக்கீஸை இடைவெளி விட்டு அடுக்கி, அவனில் வைத்து 150' ல் 15 நிமிடம் வரை பேக் செய்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
   

குட்டீஸ்களுக்கு ஏற்ற சத்துமிக்க முந்திரிப்பருப்பு குக்கீஸ் ரெடி. இதுபோல நாம் விரும்பிய நட்ஸ் சேர்த்து செய்யலாம்.