பருப்பு தண்ணீர்-1 கப்
புளிப்பான பச்சை திராட்சை-1/2 கப்
ரசப்பொடி-2டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி-சிறிது (விருப்பப்பட்டால்)
கொத்தமல்லித்தழை-ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை-1 கீற்று
காய்ந்த மிளகாய் -1
உப்பு-தேவைக்கு
நெய் -1/2 டீஸ்பூன்
திராட்சையை ஜூஸரில் போட்டு அடித்து வடிகட்டி ஒரு கப் எடுக்கவும்
அதோடு துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஒரு கப் சேர்க்கவும்.
ரசப்பொடி ,உப்பு சேர்த்து கலக்கவும்
நறுக்கிய தக்காளி சேர்க்கவும்
கொத்தமல்லிதழையை நறுக்கி சேர்க்கவும்
வாணலியில் நெய் விட்டு கடுகு ,கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து
திராட்சை ரசத்தை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதித்ததும் இறக்கவும்
Note:
விருப்பபட்டால் அதிகம் காரம் விரும்பினால் ரசப்பொடிக்கு பதில் ,தூள் கலவை(மிளகுத்தூள்(1டீஸ்பூன்),சீரகத்தூள்(1டீஸ்பூன்)மல்லித்தூள்-1டீஸ்பூன்,மஞ்சள்தூள்-சிட்டிகை,பெருங்காயம் சிட்டிகை) சேர்க்கலாம்