பாகற்காய் - 4
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - 2 (பெரியது)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறு துண்டு
உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து பொடிக்க:
அரிசி - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
முதலில் பாகற்காயை கழுவி சுத்தம் செய்து, விதைகளை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். புளியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.
பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சற்று வாசனை வரும் வரை சில நொடிகள் வறுத்து, மிக்ஸியில் அரைக்கவும். ஊற வைத்த புளியை கரைத்து புளித்தண்ணீர் எடுத்து வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 6 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சேர்த்து பொரிக்கவும். கடுகு பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து, சீரகம் பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு, பாகற்காயை போட்டு நன்கு வதக்கவும்.
பாகற்காய் எண்ணெயில் நன்கு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.