Author Topic: திராட்சை ஜூஸ்  (Read 625 times)

Offline kanmani

திராட்சை ஜூஸ்
« on: March 30, 2013, 09:06:44 AM »
கோடையில் அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு, ஜூஸ் குடிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய ஜூஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், எளிமையாக செய்யும் வகையிலும், திராட்சை ஜூஸ் ஏற்றதாக இருக்கும்.

மேலும் திராட்சை ஜூஸ் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும். அதிலும் ஆஸ்துமா, மார்பக புற்றுநோய் மற்றும் அல்சீமியர் நோய்க்கு சிறத்த மருந்தாகவும் விளங்குகிறது.

குறிப்பாக இந்த ஜூஸை காலையில் குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். சரி, இப்போது அந்த திராட்சை ஜூஸை எப்படி எளிமையாக செய்வதென்று பார்ப்போமா!!!

 தேவையான பொருட்கள்:

கருப்பு திராட்சை - 1 பெரிய கப்
தண்ணீர் - 2 கப்
சர்க்கரை - 3 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

திராட்சையை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் அதனைப் போட்டு, அதில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

 பின்பு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் அரைத்த சாற்றினை ஊற்றி வடிகட்டிக் கொள்ள வேண்டும்

இப்போது ஈஸியான திராட்சை ஜூஸ் ரெடி