Author Topic: பேபிகார்ன் பஜ்ஜி  (Read 664 times)

Offline kanmani

பேபிகார்ன் பஜ்ஜி
« on: March 27, 2013, 10:48:10 AM »
மாலை மங்கும் நேரத்தில், நல்ல சூடாகவும், மொறுமொறுவென்றும் டீ அல்லது காபியுடன் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பலரது நினைவிலும் வருவது பஜ்ஜி, போண்டா போன்றவை தான். ஆனால் இதுவரை பஜ்ஜியில் உருளைக்கிழங்கு பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, பிரட் பஜ்ஜி என்று தான் செய்திருப்போம்.

ஆனால் பேபிகார்னை வைத்து பஜ்ஜி செய்திருப்போமா! இப்போது அந்த பேபிகார்னை வைத்து எப்படி மொறுமொறுவென்று பஜ்ஜி செய்வதென்று, அதன் செய்முறையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பேபிகார்ன் - 8-10
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
 கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோடா உப்பு - 1 சிட்டிகை
 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பேபிகார்னை நீளமாக இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

 ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சோள மாவு மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சோடா உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

 பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பேபிகார்னை போட்டு பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

 பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பேபிகார்னை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி!!! இதனை மல்லி சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.